ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது

ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

மஹரகம இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இந்த அமர்வு இடம்பெறுகிறது.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 331 இளைஞர்களும் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 29 பேரும் இந்த முறை இளைஞர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த அமர்வில் பிரதான விருந்தினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment