ஆளுநர்கள் மற்றும் மேயர்களை கொடுங்கோலர்களாக அழைத்த பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

ஆளுநர்கள் மற்றும் மேயர்களை கொடுங்கோலர்களாக அழைத்த பிரேசில் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடக்க நிலையை அமுல்படுத்தி இருக்கும் மாநில ஆளுநர்கள் மற்றும் மேயர்களை 'கொடுங்கோலர்கள்' என்று பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலியாவில் ஆதரவாளர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், அரசு தன்னாலான அனைத்தையும் செய்திருப்பதாகவும் தற்போது பொருளாதாரத்தை திறந்து விட வேண்டிய நேரம் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரேசிலின் சுகாதார சேவை வரலாற்று வீழ்ச்சி ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக அந்நாட்டின் முன்னணி சுகாதார நிறுவனமான பியோக்ரூஸ் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருவதாக அது குறிப்பிட்டிருந்தது.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 66ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய பொல்சொனாரோ, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, வைரஸ் பாதிப்பை விடவும் நாட்டில் பொருளாதார பாதிப்பு மோசமடையும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த பெருந்தொற்று பற்றிய புலம்பலை நிறுத்தும்படி பொல்சொனாரோ கடந்த மாதம் பிரேசிலியர்களை கேட்டுக் கொண்டார்.

பிரேசிலில் கொரோனா தொற்று சம்பவங்கள் 12 மில்லியனை நெருங்கி இருக்கும் நிலையில் 294,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment