நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு வீடு புகுந்து தாக்குதல்! - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு வீடு புகுந்து தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றிருந்த எட்டுப் பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள், வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த கும்பல் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த குழுவின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பகாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad