காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு

விறகு சேகரிக்கச் சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ குயினா மேல் பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப் பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப் பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப் பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொதுமக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad