காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளம் காண DNA பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளம் காண DNA பரிசோதனை

கொழும்பு - கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளம் காண்பதற்காக DNA பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 06 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொஹூவல - ஆசிரி மாவத்தை பகுதியில் தீ விபத்திற்குள்ளாகிய காரொன்றில் இருந்து கருகிய நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டது.

களுபோவில - பாத்திய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரவு உணவை பெறுவதற்காக அவர் காரில் நேற்றிரவு பயணித்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad