நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது யார்? - ஆலய நிர்வாகம் விளக்கமளிப்பு! - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது யார்? - ஆலய நிர்வாகம் விளக்கமளிப்பு!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது.

அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தாகவும் இதுகுறித்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் இதனைத் தடுக்க முடியாத கட்டத்தில் கழிவு எண்ணெய் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad