நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தலைமையில் முதன்முறையாக ஏறாவூர், காத்தான்குடி பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழக் கூட்டம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தலைமையில் முதன்முறையாக ஏறாவூர், காத்தான்குடி பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழக் கூட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான நஸீர் அஹமட் தலைமையில் முதன் முறையாக பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை 08.03.2021 ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்களில் அவ்வப் பிரதேச செயலாளர்கள் கூட்டுத்தாபன நிறுவன திணைக்களத் தலைவர்கள் அதிகாரிகள் பொது நிறுவனப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளின் அபிவிருத்திக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி அதிகாரிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அரசாங்கம் அனைத்து விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழத் தலைவரின் அங்கீகாரத்துடனேயே அமுலாக்கத் தீர்மானித்தள்ளது.

அதனடிப்படையில் இந்த பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழு கடந்த காலங்களை விட காத்திரமாகப் பணியாற்ற வேண்டும்.

வழமையான கலந்துரையாடல்களுக்கும், தீர்மானங்களுக்கும் மாற்றமாக யதார்தத்தில் செய்து முடிக்கப்பட வேண்டிய விடயங்களையே இனித் தீர்மானங்களாக எடுத்து அமுல்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் அதிகாரிகளும் அலுவலர்களும் மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டும்.” என்றார்.

நிகழ்வில் உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அதிகாரிகளும் திணைக்கள கூட்டுத்தாபன நிறுவனத் தலைவர்களும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரின் நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad