மணலின் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை விரைவில் வகுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர புவிச் சரிதவியல் மற்றும் அகழ்வுப் பணியக அதிகாரிகளை பணித்துள்ளார்.
இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடப்பட்டது.
தற்போது மன்னம்பிட்டியில் ஒரு டிப்பர் மணல் 14 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனினும், கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கு இந்த மணலை ஏற்றிச் செல்லும் போது, 65 ஆயிரம் ரூபா வரை விலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணலை சட்ட விரோதமாக எடுத்துச் செல்லல், மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் கூட்டுறவு முறையொன்றை அறிமுகப்படுத்துவது பற்றி இந்தக் கலந்துரையாடலில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆறு இடங்களில் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டுறவுச் சங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண் அகழ்வு மற்றும் போக்குவரத்திற்கான ஒழுங்குபடுத்தல் செயற்றிட்டம் ஒன்றை இந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment