கோப் குழுவில் கலந்துரையாடப்படவுள்ள பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை கணக்காய்வு அறிக்கை - மேலும் சில அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

கோப் குழுவில் கலந்துரையாடப்படவுள்ள பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை கணக்காய்வு அறிக்கை - மேலும் சில அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கையில் பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 08 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மார்ச் 23 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட லங்கா மினரல் ஸண்ட்ஸ் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் 24 ஆம் திகதி புதிய ஏற்றுமதி வலயத்தை நிறுவும் செயன்முறையை மதிப்பீடு செய்யும் செயல்திறன் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

மார்ச் 26 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டபின் கல்வி நிறுவனம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06 ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 07 ஆம் திகதி காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அழைக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.

மேலும், ஏப்ரல் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் முறையாக மக்கள் வங்கி மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment