அவுஸ்திரேலியாவில் ஒரு வாரத்தின் பின்னர் உள்ளூரில் கொரோனா தொற்று - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

அவுஸ்திரேலியாவில் ஒரு வாரத்தின் பின்னர் உள்ளூரில் கொரோனா தொற்று

அவுஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒருவருக்கு உள்ளூரில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 வயது ஆடவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நோய் தொற்றியிருந்ததாகவும், அறிகுறிகள் தென்பட்டதும் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றும் குவீன்ஸ்லாந்து முதலமைச்சர் அனஸ்டாசியா பாலாஸ்குக் தெரிவித்தார்.

நேற்று முதல், குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகரான பிரிஸ்பேனில் மருத்துவமனைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் வருகையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.

உட்புறங்களிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசம் அணிய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆடவருக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பதைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடைத் தொகுதிகள், பேரங்காடிகள், இத்தாலிய உணவகம் ஆகியவற்றுக்கு ஆடவர் சென்றிருந்ததால் அவற்றுக்குச் சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad