சாதனை படைத்துள்ள ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

சாதனை படைத்துள்ள ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்

2021 பெப்ரவரி மாதத்தில் 1.2 மில்லியன் கிலோ கிராம் சரக்குகளை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கிடையில் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் பரிமாற்றம் செய்து சாதனை படைத்துள்ளது என்று ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டு மாலத்தீவு ஒரு பிரபலமான விமான நிறுவனமாக மாறியுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் மாலைதீவு விமான நிலையம் மற்றும் கொழும்புக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் 1.2 மில்லியன் கிலோ கிராம் பொருட்களை பரிமாற்றம் செய்துள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் 500 கிலோ கிராம் சரக்குகளை கொழும்பிலிருந்து மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதுடன், 188 கிலோ கிராம் சரக்குகளை மாலைதீவிலிருந்து கொழும்புக்கு இறக்குமதி செய்துள்ளது.

No comments:

Post a Comment