சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபர் மொஹமட் பாகிருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபர் மொஹமட் பாகிருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மத்ரஸா பாடசாலையின் அதிபரான மொஹமட் பாகிர் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே சந்தேகநபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் போது தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமை மற்றும் குற்றச் செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமது சேவை பெறுநர்களுக்கான பிணை கோரிக்கையை முன்வைப்பதற்காக, வழக்கின் குறிப்புகளை பெற்றுத் தருமாறு சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment