தாய்வானில் இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்து - விமானிகளை தேடும் மீட்பு குழுவினர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

தாய்வானில் இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்து - விமானிகளை தேடும் மீட்பு குழுவினர்

கடந்த அரை ஆண்டுகளில் மூன்றாவது சம்பவமாக தாய்வானில் இரு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. 

இந்த நாட்டின் மீது உரிமை கொண்டாடும் சீனாவின் அழுத்தத்திற்கு மத்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலும் அமெரிக்க ஆயுதங்களை கொண்டிருக்கும் தாய்வான் விமானப் படை சிறந்த பயிற்சி மற்றும் ஆயுதங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று (22) பயிற்சியின்போது எப்-5ரக போர் விமானங்கள் இரண்டு தென்கிழக்கு கடற்கரைக்கு அப்பால் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்ததாக தாய்வான் தேசிய மீட்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. 

இந்த இரு விமானங்களிலும் ஒரு விமான ஓட்டி மாத்திரம் இருந்துள்ளனர்.

விமானப்படை ஹெலிகொப்டர், கரையோரக் காவல் படையினர் மற்றும் மீட்புக் கப்பல்கள் அந்த விமானிகளை தேடி வருகின்றனர்.

கடந்த ஒக்டோபரில் எப்-5 ரக போர் விமானம் விபத்துக்கு உள்ளாகி அதன் விமானி கொல்லப்பட்டார். 

அடுத்த மாதத்தில் அதனை விடவும் நவீன ரக எப்-16 போர் விமானம் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் விபத்துக்கு உள்ளாகி அதில் இருந்து விமானி கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad