குருதிக் கொடையாளர்களுக்கு ஓர் அவசர அழைப்பு..! யாழ். போதனாவில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு..! உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள்...! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

குருதிக் கொடையாளர்களுக்கு ஓர் அவசர அழைப்பு..! யாழ். போதனாவில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு..! உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள்...!

யாழ். போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என வட பிராந்திய குருதி மாற்று பிரயோக வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவ நிபுணர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லா வகையான இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொவிட் தொற்று காரணமாக நடமாடும் இரத்ததான முகாம்களை நடத்த முடியாமல் போனதால் நாடளாவிய ரீதியில் இரத்தம் சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், விபத்துக்களில் பாதிக்கப்படுவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு வழங்குவதற்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடையவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும். தேசிய குருதி மாற்று பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முற்பதிவுகளை செய்து குருதியை வழங்க முடியும்.

No comments:

Post a Comment