அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினார் நடிகர் செந்தில் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினார் நடிகர் செந்தில்

மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.கவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த செந்தில் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.

அ.தி.மு.கவின் பேச்சாளராக இருந்த செந்தில், ஜெயலலிதாவின் மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பின் செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் இன்று தன்னை பா.ஜ.க கட்சியில் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பா.ஜ.கவின் வழக்கம் என்பதால்தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன்.

மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.கவில் இணைந்திருக்கிறேன்.

நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad