பொலிஸ் ஊடகப் பிரிவு, பொது மக்கள் உறவுகள் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

பொலிஸ் ஊடகப் பிரிவு, பொது மக்கள் உறவுகள் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

எம்.எப்.எம்.பஸீர்

பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொதுமக்கள் உறவுகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியதுடன், நேற்றுமுன்தினம் அவர் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பொலிஸ் ஊடக பிரிவின் பதில் பணிப்பாளராக புத்திக மனதுங்க செயற்பட்டு வந்த நிலையில், அப்பிரிவுக்கு நிரந்தர பணிப்பாளர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad