ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு - 14 பேர் பலி, 3 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு - 14 பேர் பலி, 3 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் சமீப காலமாக பனிப் பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் கிராமவாசிகள் 14 பேர் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இது தவிர 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை அரசின் உள்ளூர் செய்தி தொடர்பு அதிகாரி நிக் முகம்மது நஜாரி உறுதிப்படுத்தினார்.

சமீப வாரங்களாக பதக்ஷான் பகுதியில் பனிப் பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. மலைப் பிரதேசத்தில் மாவட்ட சாலை ஒன்றில் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து மீட்புக் குழு ஒன்றும், உள்ளூர் பொலிசாரும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment