மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கம் எமக்கு தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றே தமக்கு தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினர் வலியுறுத்தினர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அங்கு ஒன்றுக்கூடிய ஐக்கிய மகளிர் முன்னணியினரால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க காரியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்து கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டதாரிகள் சிறிகொத்தாவின் முன்னால் உள்ள வீதியில் நடந்து சென்று பின்னர் சிறிகொத்தாவின் நுழைவாயிலின் முன்னாள் இருந்து கோசம் எழுப்பினர்.
சுமார் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது' சேர் கிராமத்துடன் உரையாடலில், நாம் பட்டினியில்', 'பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்துங்கள், 'பட்டதாரிகளின் நியமனத்தை நிரந்தரமாக்கு', 'சாகசம் செய்து வாக்குகளை வென்றெடுத்தனர். நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்து சேர்க்கு வாக்களித்தனர்', 'காடழிப்பை உடன் நிறுத்து', 'அன்று தேங்காய் 60 ரூபாய் இன்று தேங்காய் 125 ரூபாய்', ' பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது, நாம் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளோம், தற்போது சேர்க்கு மகிழ்ச்சியா', 'வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களின் உயிருக்கு ஆபத்து' போன்ற சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பெண்ணொருவர் 'சுபீட்சத்துக்கான நோக்கு' என்ற பெயர் பதியப்பட்ட ஆடை அணிந்து ஆர்ப்பாட்டதாரிகளின் முன்னால் வந்ததுடன், அவரை முன்னிலைப்படுத்தியே ஆர்ப்பாட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோசங்களை எழுப்பிய ஆர்பாட்டதாரிகள், 'ஆட்சியாளர்கள் அரச மாளிகைகளில் உழைக்கும் மக்கள் வீதியில்', 'மகிழ்ச்சியுடன் வரவேற்ற வெளிநாட்டு பணியாளர்களை ஏமாற்றியுள்ளனர்', 'அளந்தார் அளந்தார் கோட்டபய தேங்காவையும் அளந்தார்', 'நாகலோகத்தின் இரத்தினக்கல்லை காண்பித்து மக்களின் வயிற்றுக்கு தாக்கியுள்ளனர்', 'வர்த்தமானி வர்த்தமானி பந்துவின் வர்த்தமானி இலாபம் இலாபம் பந்துவின் வர்த்தமானி, 'சிராந்தி, அனோமா இங்கே வாருங்கள், எமது கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்', 'வேண்டாம் வேண்டாம் இந்த அரசாங்கம், வேண்டும் வேண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம்' என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment