தனிமைப்படுத்தலிலிருந்து வீடு திரும்பினார் ஹலீம் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

தனிமைப்படுத்தலிலிருந்து வீடு திரும்பினார் ஹலீம் எம்.பி.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் இன்று (22) காலை தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று கண்டி ஆசிரி வைத்தியசாலைக்கு உடற் பரிசோதனைக்கு சென்ற போது அன்றிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், கண்டி சிடிடேடல் தனியார் விடுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹலீம் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து கொண்டு வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவரின் முகநூல் பதிவில், கொவிட் 19 நோய் காரணமாக சுமார் இரண்டு வார காலமாக கண்டி சிடிடேடல் தனியார் விடுதியில் தனிமைபடுத்தலில் இருந்து பூரன சுகம் பெற்று இன்று வீடு திரும்பினேன், அல்ஹம்தில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே. எனக்காக வல்ல நாயகனிடம் துஆ கேட்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்”. என குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad