ஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

ஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதியில் இன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து விட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55 - 60 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வெள்ளை சாரமும், மெருன் நிற ஷேட்டும் அணிந்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment