ஒரு பால் திருமணம் தொடர்பில் ஜப்பான் நீதிமன்றத்தால் முக்கிய தீர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

ஒரு பால் திருமணம் தொடர்பில் ஜப்பான் நீதிமன்றத்தால் முக்கிய தீர்ப்பு

ஜப்பானில் ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிப்பதில் தோல்வி அடைந்திருப்பது 'சட்டத்திற்கு எதிரானது' என்று ஜப்பானிய மாவட்ட நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு அளித்துள்ளது.

ஜப்பானிய அரசியலமைப்பில் திருமணம் என்பது இரு பாலாருக்கும் இடையிலான ஒன்று என வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் திருமணத்தை மறுப்பது அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் சமத்துவத்தை நிராகரிப்பதாக இருக்கும் என்று சப்போரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இது ஓரினச் சேர்க்கையாளர்களின் போராட்டத்திற்கு ஓர் அடையாள ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அபிவிருத்தி அடைந்த ஜி7 நாடுகள் குழுவில் ஒரு பால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்காத ஒரே நாடாக ஜப்பான் உள்ளது.

இந்நிலை ஓரினச் சேர்க்கையாளர் குழு ஒன்று தமக்கு ஏற்பட்டிருக்கும் உள ரீதியான பாதிப்புகள் தொடர்பில் தொடுத்த வழக்கிலேயே மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

எனினும் அவர்களின் இழப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment