ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இரண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் இறுதி அறிக்கைகளை ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர இன்று (05) சபாநாயகரிடம் கையளித்ததுடன், இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவும் உடனிருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க கூட்டுத்தாபனப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதில் ஒன்றாகும். இது மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2018ஆம் திகதி டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment