பதவியை இராஜினாமா செய்தார் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

பதவியை இராஜினாமா செய்தார் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், நாலக கலுவெவ தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது தனிப்பட்ட காரணம் தொடர்பில் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த கடிதம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சிக் காலப் பகுதியில், ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளராக இருந்த நாலக கலுவெவ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக, நியமிக்கப்பட்டதோடு, பின்னர் அவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னர் குறித்த பதவியில் சுதர்ஷன குணவர்தன செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad