8 ஆயிரம் அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட பரசூட் வீரர்கள் : ஒருவர் பலி, ஒருவர் காயம் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

8 ஆயிரம் அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட பரசூட் வீரர்கள் : ஒருவர் பலி, ஒருவர் காயம்

பரசூட் பயிற்சியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 34 வயதுடையவரெனவும் தெரியவந்துள்ளது.

அம்பாறை - உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக் கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad