இரண்டாம் முறி தொடர்பில் ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றினால் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

இரண்டாம் முறி தொடர்பில் ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றினால் விளக்கமறியல் நீடிப்பு

மத்திய வங்கியில் 2016 இல் இடம்பெற்ற ரூ. 15 பில்லியன் தொடர்பான இரண்டாவது முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு, மார்ச் 31 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற, இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தினை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சுமார் சுமார் ரூபா 3,689 கோடி (ரூ. 36.89 பில்லியன்) நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, குறித்த சந்தேகநபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இரு பிணை முறிகள் தொடர்பிலும் இரு வெவ்வேறு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, முதலாவது பிணை தொடர்பில், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு மார்ச் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிணை முறி மோசடி தொடர்பில் நேற்று (25) குறித்த சந்தேகநபர்கள் 7 பேருக்கும் இன்றைய தினம் (26) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில், இன்று (26) அவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு உததரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment