உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் 65 தொகுதிகள் மாத்திரம் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
ஏனைய 22 தொகுதிகளும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சாட்சியங்கள் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுவதால், அவை ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை அமைச்சரவை மற்றும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்கள், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆகியோருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment