50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது

அரியப்பட்ட மரத்துண்டுகளுடன் போக்குவரத்து செய்யும் உரிமத்தை வழங்க ஒரு நபரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் கலென்பிந்துனுவெவ பகுதியில் கடந்த 26ஆம் திகதி கைது செய்தனர்.

கலென்பிந்துனுவெவ பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கஹகட்டகஸ்திகிலிய வன அதிகாரி அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டு பணியாற்றி வந்த கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த வனவள அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ வீதி கலென்பிந்துனுவெவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட நபரொருவர் அரியப்பட்ட மரத் துண்டுகளை கொண்டு செல்வதற்கு குறித்த அதிகாரி ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளதுடன் அதில் 30 ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளார். 

மிகுதிப் பணத்தை குறித்த அதிகாரியின் வீட்டில் வைத்து பெற்றுக் கொள்ளும் போதே அதிகாரியை இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த அதிகாரி அன்றைய தினம் இரவே மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அநுராதபுரம் நிருபர்

No comments:

Post a Comment