42 பவுண் தாலிக் கொடி திருட்டு - யாழிழ் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

42 பவுண் தாலிக் கொடி திருட்டு - யாழிழ் சம்பவம்

தனிமையில் வாழும் வயோதிபப் பெண்ணின் சுமார் 42 பவுண் தாலிக் கொடி திருட்டுப் போயுள்ளதாக யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு நேற்று (09) மாலை இலந்தைக்காடு பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண்ணால் வழங்கப்பட்டுள்ளது.

அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாலிக் கொடி திருட்டுப் போனமை தொடர்பில் சிலரில் சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

தான் பாதுகாப்பாக வைத்த இடத்தில் தாலிக் கொடி கடந்த வாரம் வரை இருந்ததாகவும் நேற்று காணாமற்போயுள்ளதாகவும் முறைப்பாட்டில் வயோதிபப் பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad