4 பிரதான பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு - உப தலைவர் பதவி 7 க்கு, 14 பேர் போட்டி - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

4 பிரதான பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு - உப தலைவர் பதவி 7 க்கு, 14 பேர் போட்டி

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவராக தற்போதைய தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோவும், செயலாளராக தற்போதைய செயலாளர் பிரேமா பின்னவலவும் பொருளாளராக எம்.கே.டபிள்யூ. சாந்த லால் த சில்வா ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

பதிவாளராக சமன் குமார 24ஆவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மெய்வல்லுநர் சங்கத்திற்கு எதிர்வரும் நான்கு ஆண்டுகள் பதவிகளுக்கு போட்டியின்றித் தெரிவான இவர்கள் இத்துறையில் பல வருட கால அனுபமுள்ளவரகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைவர் பாலித பெர்னாண்டோ அவர்கள் இச்சங்கத்தில் பல வருட காலமாக பிரதான செயலாளராக சேவையாற்றி அனுபவமுள்ளதுடன், நிர்வாக சேவையில் நீண்ட கால அனுபமுள்ளவருமாவார். 

பிரேமா பின்னவல 14 வருடங்கள் செயலாளராக இருந்துள்ளதுடன் இலங்கை காப்புறுதி நிறுவனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றியவர்.

பதிவாளராகத் தெரிவு செய்யப்படடுள்ள சமன் குமார களனி பல்கலைக்கழகத்தில் உடற்கல்விப் பணிப்பாளராக இருந்ததுடன மெய்வல்லுநர் தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். 

பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கே.டபிள்யு. சாந்தலால் த சில்வா பல சங்கங்களில் பலவித பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக செயற்பட்டுள்ளதுடன் மெய்வல்லுநர் சங்கத்தில் பல தடவைகள் பொருளாளராக பதவி வகித்துள்ளவரென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தினமாக இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்புமனு 16ஆம் திகி 3.00 மணிக்கு டொரின்டன் பிளேசிலுள்ள மெய்வல்லுநர் சங்கக் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது. 

7 உப தலைவர் பதவிக்கு 17 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உப தலைவர் பதவிக்கு தற்போதைய உப தலைவர்கள் அனைவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் புதிதாகவும் போட்டியிடுவதற்கான மனுக்கல் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதனடிப்படையில் உப தலைவர்கள் பதவிக்கு லால் சந்திரகுமார, ஜி. எல். எஸ். பெரேரா, அனில் வீரசிங்க, எஸ். டபிள்யூ. நிமல்சிறி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, ஏ. எஸ். எம். அக்மால், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, அஜித் நாரகல, சந்தன ஏக்கநாயக்க, ஜகத் ஞானசிறி த சில்வா, இந்திக்க ஜயவர்தனவுடன் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இப்பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

உப தலைவர்கள் 7 பேரில் 6 பேர் ஆண்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஏழாவதாக கட்டாயமாக பெண் ஒருவர் உப தலைராகத் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இந்த பெண் உப தலைவர் பதவிக்கு தற்போதைய உப தலைவர் அய்ராங்கனி ரூபசிங்கவும் முன்னாள் மெய்வல்லுநர் வீராங்கனை தமயந்தி தர்ஷாவும் போட்டியிடுகின்றனர். 

உப பொருளாளர் பதவிக்கு எம்.ஏ. உபாலியும், அமில விஜேகோனும் போட்டியிடுவதுடன் உதவி செயலாளர் பதவிக்கு பாலித ஜயதிலக்கவும், வருணவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment