க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் கைது

அநுராதபுரம் பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கணித பரீட்சையில் உறவினர் ஒருவருக்காக முன்னின்றமை தொடர்பில் பரீட்சை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹராம, வீரவல பகுதியை சேர்ந்த குறித்த நபர் பரீட்சை எழுதுவதற்காக அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வலஸ்முல்ல மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad