யாழ்ப்பாணத்தில் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மன்னாரைச் சேர்ந்த இரண்டு பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

யாழ்ப்பாணத்தில் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மன்னாரைச் சேர்ந்த இரண்டு பேர் கைது

யாழ்ப்பாணம், எலுவைதீவு கடல் பகுதியில் 10 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சுமார் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், எலுவைதீவு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகொன்று கண்கானித்து சோதனை செய்தனர். 

அப்போது குறித்த படகில் இருந்து சுமார் 141 கிலோ கிராம் ஈரமான கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். மேலும், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ. 42.3 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கோவிட்19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 31 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

குறித்த சந்தேக நபர்கள் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad