இன்று முதல் மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம், பெயர்ப்பட்டியல் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

இன்று முதல் மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம், பெயர்ப்பட்டியல் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார

இன்று முதல் மேலும் பட்டதாரிகள் 10 ஆயிரம் பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நல்லாட்சியில் நியமனம் வழங்கப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேரை நிரந்தர சேவையில் இணைக்க இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கொரோனா தொற்றினால் அவர்களை அரச சேவைக்கு இணைக்கும் பணி தாமதமானது. அவர்களின் ஆவணங்களை பெற்று நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மாவட்ட செயலாளர் அலுவலக மட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்படும். இவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment