10 வயதில் இரவல் வாங்கிய புத்தகத்தை 74 வயதில் திருப்பிக் கொடுத்த பெண் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

10 வயதில் இரவல் வாங்கிய புத்தகத்தை 74 வயதில் திருப்பிக் கொடுத்த பெண்

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 64 ஆண்டுகள் கழித்துத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

பெட்டி டயமண்ட் என்ற அவர் கூடவே 500 டொலர் நன்கொடையையும் குவீன்ஸ் பொது நூலகத்திற்கு அனுப்பியுள்ளார்.

புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய திகதி கடந்து விட்டதால், அதை நூலகத்திற்குச் சென்று திருப்பி கொடுக்கக் கூச்சமாய் இருந்ததாக அவர் தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

'ஓல் போல்' என்ற புத்தகத்தை அவர் 1957ஆம் ஆண்டில், இரவல் வாங்கினார். அப்போது அவருக்கு 10 வயது. காலப்போக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர் மறந்து விட்டார். அது கண்ணில் பட்டபோது வீசவும் மனமில்லை என்று டயமண்ட் தெரிவித்தார்.

ஆனால், அவர் இறுதியாக தமது 74ஆம் வயதில், அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்ததாக தி நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

தாமதமாகப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்ததற்கான கட்டணத்தை அந்த நன்கொடை ஈடுகட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment