ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மீது சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றபத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
உரிய அனுமதிப்பத்திரம் இன்றி, நிதி நிறுவனமொன்றை நடத்தியதற்காக, நிதி நிறுவன சட்டத்தின் கீழ், ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இரு தடவைகள் கைது செய்யப்பட்ட குறித்த நால்வரும் இறுதியாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபா 13.7 பில்லியன் வைப்பீட்டை சட்டவிரோதமாக பெற்றதன் மூலம் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஜனவரி 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் (06) விடுதலை செய்யப்பட்ட நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) மீண்டும் ஜனவரி 08ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜனவரி 15ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment