இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இன்றைய (03) 6ஆம் நாளில் 21,147 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இதுவரை மொத்தமாக 139,914 பேருக்கு, இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட AstraZeneca Covishiled தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 18 மில்லியன் (1 கோடி 80 இலட்சம்) டோஸ் AstraZeneca Covishiled தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை, அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் எடுத்துள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகைள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment