காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - மின்சார வேலி அமைக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - மின்சார வேலி அமைக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கண்டி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காட்டு யானைகளின் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுவின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தெம்பே பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை அண்மித்த பல கிராமங்களை உள்ளடக்கும் வகையில் இந்த ஆண்டு புதிய மின்சார வேலிகள் அமைக்கப்படும்.

விவசாயத்துறையினரின் அன்றாட வாழ்வாதாரத்தை வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன. அவை இந்த ஆண்டு முதல் குறைக்கப்படும்.

வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சிற்கு மேலதிகமாக, இதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்படும். வேலி கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி படையினருக்கு புதியவர்களின் சேவைகளைப் பெற முடியும்,

மின்சார வேலி அமைப்பதற்காக நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு 43.8 கிலோ மீட்டர் நீளமுள்ள வேலி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் அசோகா தங்கொல்ல, மனிதன்- யானை மோதலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகம் ஒரு முன்னோடித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான கள ஆய்வு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட பலர் கலந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(அக்குறணை நிருபர்)

No comments:

Post a Comment