மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தோரை புத்தளம் வாக்காளர் பட்டியலில் பதிய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தோரை புத்தளம் வாக்காளர் பட்டியலில் பதிய நடவடிக்கை

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பகுதியில் தங்கியுள்ளவர்களை இவ்வாண்டு புத்தளம் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அவர்கள் மன்னார் மாவட்டத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அது சரியானதல்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர்களை மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்வதற்காக எடுக்கப்படும் முயற்சி அரசியல் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment