பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தக் கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அத்துடன் குறித்த அறிக்கையில் இருப்பதை மறைக்க வேண்டிய தேவையில்லை அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக குறித்த தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரித்திருந்தது.

அரசாங்கம் எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை என கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment