தனி அஞ்சல் குறியீட்டை பயன்படுத்தப் போவதாக பலஸ்தீன அதிகார சபை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

தனி அஞ்சல் குறியீட்டை பயன்படுத்தப் போவதாக பலஸ்தீன அதிகார சபை அறிவிப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொதிகளை பெறுவதற்கு இலகுவாகவும் தமது இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும் சொந்தமான அஞ்சல் குறியீட்டை பயன்படுத்தப் போவதாக பலஸ்தீன அதிகார சபை அறிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான சர்வதேச தபால்கள் தற்போது ஜோர்தான் அல்லது இஸ்ரேல் ஊடாகவே வருகின்றன.

இந்நிலையில் பலஸ்தீன அஞ்சல் குறியீடு அமுல்படுத்தப்படுவதை உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்தும்படி அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்திடம் பலஸ்தீன அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

“பலஸ்தீன அஞ்சல் குறியீட்டை கொண்டிராத தபால் உருப்படிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏற்கப்படமாட்டாது” என்று பலஸ்தீன தொலைத் தொடர்பு அமைச்சர் இஷாக் சிதிர் தெரிவித்துள்ளார். 

பலஸ்தீன அஞ்சல் குறியீடு வெளிநாட்டில் இருந்து வரும் பொதிகள் பறிமுதல் செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும் என்று சிதிர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஆறு தொன்கள் அளவு பலஸ்தீன பொதிகள் ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அவைகளை விநியோகிப்பதற்கு இஸ்ரேல் இடையூறு செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment