3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக கூறிய சபாநாயகர் அதனை செய்யவில்லை, பிரேமலாலுக்கு ஒரு தீர்ப்பும் ரஞ்சனுக்கு வேறு தீர்ப்பும் இருக்க முடியாது - எதிர்க்கட்சி தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக கூறிய சபாநாயகர் அதனை செய்யவில்லை, பிரேமலாலுக்கு ஒரு தீர்ப்பும் ரஞ்சனுக்கு வேறு தீர்ப்பும் இருக்க முடியாது - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக 3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் அறிவித்தும் சபாநாயகர் அதனை செய்யவில்லை. அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று முதல் பாராளுமன்றத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது தொடர்பில் 3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் அன்று சபைக்கு அறிவித்திருந்தார். 

அதன் பிரகாரம் இன்றைய தினம் 3 வாரங்கள் பூர்த்தியாகின்றன. அதன் பிரகாரம் சபை ஆரம்பிக்கும்போது சபாநாயகர் அவரது அறிவிப்பில் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பான தனது தீர்ப்பை அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. 

ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சிறைச்சாலையில் இருந்து பாராளுமன்றத்துக்கு அழைத்து வர தீர்மானம் எடுத்த சபாநாயகர், ஏன் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்து வராமல் இருக்கின்றார் என கேட்கின்றேன். பிரேமலால் ஜயசேகரவுக்கு ஒரு தீர்ப்பும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வேறு தீர்ப்பும் இருக்க முடியாது. பிரேமலால் ஜயசேகரவுக்கு இருக்கும் வரப்பிரசாதங்கள் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இருக்க வேண்டும்.

அத்துடன் ரரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடொன்றை செய்திருக்கின்றார். அதன் பிரகாரம் அந்த விசாரணை முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருக்கின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளையதினம் (இன்று) பாராளுமன்றத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment