வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் : கிரேட்டா தன்பெர்க் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

வழக்கு தொடர்ந்தாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் : கிரேட்டா தன்பெர்க்

சுவீடனின் சுற்றுக் சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அமுல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார் ஏற்படுத்ததியுள்ளனர். 

பேரிகார்கடுகளை வரிசையாக வைத்து வீதிகளில் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையத்தள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.

அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

பருவ நிலை மாற்றம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை கேள்விகளால் துளைத்த சுவீடனின் சுற்றுக் சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவான டுவீட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment