தொழிலாளர்களை காட்டிக் கொடுக்காமல் வென்றெக்கும் போராட்டமாக அமைய வேண்டும் - பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 4, 2021

தொழிலாளர்களை காட்டிக் கொடுக்காமல் வென்றெக்கும் போராட்டமாக அமைய வேண்டும் - பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம்

தொழிலாளர்களை காட்டிக் கொடுக்காமல் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயமான போராட்டமாக நாளைய அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அமைய வேண்டும் என்று பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் அறிவித்துள்ளது.

ஹட்டனில் இன்று (04.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மலையகம் தழுவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் இவ்வாறு அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெறுவதற்கு நாளை நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்கின்றோம். போராட்டமானது ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமை வென்றெடுக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களிலும் இப்படியான போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துவிட்டு, கடைசியில் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளே இடம்பெற்றன. இம்முறை அவ்வாறு நடைபெறக் கூடாது. தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயமான போராட்டமாக அமைய வேண்டும். அதற்கான எமது அழுத்தங்கள் தொடரும்." என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad