பல நாடுகளில் கொரோனா பரவியுள்ளது என்பதை சஜித்துக்கு நினைவுபடுத்துகிறேன் - தனியார் பஸ் சேவைகளால் பயணிகளுக்கு நெருக்கடி என்கிறார் அமைச்சர் லொக்குகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

பல நாடுகளில் கொரோனா பரவியுள்ளது என்பதை சஜித்துக்கு நினைவுபடுத்துகிறேன் - தனியார் பஸ் சேவைகளால் பயணிகளுக்கு நெருக்கடி என்கிறார் அமைச்சர் லொக்குகே

தனியார் பஸ் சேவையானது பயணிகளுக்கு நெருக்கடியேற்படுத்தி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நெருக்கடி நிலையில் இ.போ.ச மற்றும் ரயில் சேவைகள் முழுமையாக பயன்படுத்தப்படும் என போக்கு வரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிந்துகொண்டேன். 

விசேடமாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரச வங்களில் இருந்து விசேட நிவாரணமாக 3 இலட்சம் ரூபாவை 4 சதவீத வட்டியில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் சேவையானது பயணிகளுக்கு நெருக்கடியேற்படுத்தி வருவதாக முறைப்பாடுகள் உள்ளன.

அசௌகரியங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை போக்கு வரத்து பஸ்கள் மற்றும் ரயில் சேவைகளை திறம்பட நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதுகுறித்து பேச்சு நடத்த அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. 

இதனிடையே எதிர்க்கட்சி பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. இன்று தடுப்பூசிகள் வழங்கும் அளவுக்கு வந்துவிட்டோம். அடுத்த மாதத்திலிருந்து தினமும் இலட்சம் தடுப்பூசிகளை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம். 

சஜித் பிரேமதாஸவுக்கு, கொரோனா என்பது எமது நாட்டில் மாத்திரமன்றி அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் பரவியிருக்கின்றது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

நாங்கள் மக்களுடன்தான் செயற்படுகின்றோம் என்பதை துறைமுக விவகாரத்திலிருந்து உறுதிப்படுத்தியிருக்கின்றோம். இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் என்றாலும்கூட இடித்துரைக்கின்ற தீர்மானங்களை எடுக்கின்ற அரசாங்கமாக எமது அரசாங்கம் உள்ளது.

No comments:

Post a Comment