இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க புதிய ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க புதிய ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

அனுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்ட சில பிரதேச செயலகப் பகுதிகளில் புதிய ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அதனை நோக்காகக் கொண்டு திறப்பனையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களையும் அதிகாரிகளையும் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆடைத் தொழிற்சாலைகள் பெரும் பங்காற்றி வரும் நிலையில். அனுராதபுரம் மாவட்டத்தில் சில ஆடைத் தொழிற்சாலைகள் மாத்திரமே உள்ளது. 

இதனால் பல இளைஞர், யுவதிகள் மாவட்டத்திற்கு வெளியில் சென்று தொழில் செய்வதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஏனைய தொழிற்துறைகளில் ஈடுபடாமலும் தொழிலின்றி இருக்கின்றனர். 

அதற்கான தீர்வாக அனுராதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்டு சில பிரதேச செயலகப் பகுதிகளில் இது போன்ற புதிய ஆடைத் தொழிற்சாலைகளை தனியார் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

அநுராதபுரம், திறப்பனை நிருபர்கள்

No comments:

Post a Comment