ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை வழிமறித்து பொதுமக்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை வழிமறித்து பொதுமக்கள்

முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை வழிமறித்து பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை வள்ளுவர்புரம் மற்றும் மாணிக்கபுரம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சியில்  இயங்கி வரும்  ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் கிராமத்தினை சேர்ந்த சிலருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கிராம மட்ட அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிராமத்தில் இருந்து ஆடைத் தொழிற்சாலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். 

இவ்வாறு ஊழியர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளை கிராமத்தில் இருந்து வெளியில் செல்லவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்த புதுக்குடியிருப்பு பொலிசார் பேருந்துக்களை செல்ல விடுமாறு அறிவுறுத்தியும் மக்களால் பேருந்து தடுக்கப்பட்டு அதில் பயணித்தவர்கள் இறக்கப்பட்டனர்.

இதன்போது ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் வருகை தந்து கிராம அமைப்பினருடன் பேச்சு நடத்தியதுடன் புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதா அதிகாரியினை சந்தித்து அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்பட இணக்கம் காணப்பட்டது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

No comments:

Post a Comment