கோவக்ஸ் அமைப்பின் மூலம் தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடாக கானா இடம்பிடித்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

கோவக்ஸ் அமைப்பின் மூலம் தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடாக கானா இடம்பிடித்தது

கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கும் கோவக்ஸ் அமைப்பின் மூலம் தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடாக கானா இடம்பிடித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கோவக்ஸ் அமைப்பு வாயிலாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கோவக்ஸ் அமைப்பு உலகளவில் சுமார் இரண்டு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரசெனிகா பல்கலைக்கழகம் உருவாக்கிய மொத்தம் 600,000 தடுப்பூசிகள் கானாவின் தலைநகர் அக்ராவுக்கு இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு முக்கியமான தருணம் என உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளன.

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 80,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 580 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குறைந்த அளவிலான பரிசோதனையின் காரணமாக இந்த எண்ணிக்கை, உண்மையான எண்ணிக்கையில் இருந்து குறையும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment