நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம் - இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம் - இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

கொவிட்-19 தொடர்பில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவது தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை வரவேற்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இதனை அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நீர் மூலம் பரவாது என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே நேற்றையதினம் (09) தெரிவித்த கருத்தின் அடிப்படையில், கொவிட்-19 சடலங்களை அடக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? என, இன்றையதினம் (10) பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மீதான மனித உரிமை குற்றச்சாட்டு தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னெடுக்கவுள்ள யோசனைக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை பாராளுமன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment