மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுங்கள் - முஜிபுர் ரஹ்மான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுங்கள் - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 10 மாதங்களாக நாட்டில் இடம்பெற்று வந்த பெரும் பிரச்சினைதான் கொவிட்டில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு மாத்திரம் அனுமதித்திருந்தது.

என்றாலும் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் இந்த சபையில் அறிவித்திருந்தார். அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அதேபோன்று இந்த விடயத்தை வர்த்தமானியில் வெளியிட்டால்தான் அது சட்டமாக்கப்படும். அதனால் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad