ஒரு வார காலப்பகுதியில் ஒரு பெண் உட்பட ஏறாவூரைச் சேர்ந்த மூவர் மத்திய கிழக்கில் மரணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

ஒரு வார காலப்பகுதியில் ஒரு பெண் உட்பட ஏறாவூரைச் சேர்ந்த மூவர் மத்திய கிழக்கில் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒரு வார காலப்பகுதியில் ஏறாவூரைச் சேர்ந்த மூவர் மத்திய கிழக்கில் மரணமடைந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை 27.02.2021 கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஏறாவூரைச் சேர்ந்த ஸியாஹூல் ஹக் முஹம்மத் அலியார் (வயது 25) என்பவர் மரணமடைந்துள்ளார் என்று அவரது கட்டார் நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியை அண்டி வசித்து வந்த அப்துல் ஜப்பார் சித்தி நஸீரா (வயது 50) என்பவர் கடந்த 19.02.2021 அன்று மரணித்துள்ளார்.

6 மாத கால சுற்றுலா வீசாவில் துபாய் சென்றிருந்த சமயம் இவர் சுகவீனமுற்ற நிலையில் துபாயிலுள்ள அஸ்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் துபாய் நாட்டிலேயே இடம்பெற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏறாவூரைச் சேர்ந்த மற்றுமொரு இளம் குடும்பஸ்தரான இஸ்மாயில் சாதாத் (வயது 34) என்பவர் கடந்த 21.02.2021 அன்று மரணமாகியுள்ளார். அவரது ஜனாஸா நல்லடக்கமும் துபாய் நாட்டிலேயே இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment