பிளாஸ்ரிக் பாவனையைத் தடை செய்யும் இரண்டு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

பிளாஸ்ரிக் பாவனையைத் தடை செய்யும் இரண்டு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டது

தனியார் பாவனை மற்றும் குறுகிய கால பிளாஸ்ரிக்குகளை மார்ச் மாதம் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்வது தொடர்பாக இரண்டு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர இவ்வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார்.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் மூலம் சுற்றாடல் துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பிளாஸ்ரிக் கட்டுப்பாடு தொடர்பான இரண்டு வர்த்தமானி பத்திரிகை வௌியிடப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி இரசாயன திரவியங்களை பொதியிடுவதற்காக பொலி எதிலின் டெரப்தெலெட் மற்றும் பெலிவியனையில் குளோரைட் எனப்படும் இரண்டு வகையான பிளாஸ்ரிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் நிகர அளவு 20 மில்லி லீட்டர் அல்லது 20 கிராமிற்கு குறைந்த செஸெ பக்கெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அது உணவு மற்றும் ஔடதங்களை பொதியிடலுக்கு உள்ளடக்கப்படவில்லை. 

காற்றினால் நிரப்பப்படும் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பலூன், நீரில் மிதக்கும் மற்றும் நிச்சல் தடாகங்களில் பாவிக்கும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளடக்கப்படவில்லை. 

பிளாஸ்ரிக் குச்சியுடன் கூடிய கொட்டன் பட் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் வைத்திய மற்றும் கிளினிக் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்ரிக் கொட்டன் பட் உள்ளடக்கப்படவில்லை. 

எந்த பிளாஸ்ரிக் பொருட்கள் உற்பத்தி தொடர்பாக அந்த உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பற்றி கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியதோடு சர்வதேச ரீதியாக ஒவ்வொரு பிளாஸ்ரிக் வகையை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்த வேண்டிய அடையாள குறியீடு முறையும் இந்த வர்த்தமானி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு அதனை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்ரிக் பொருட்களை மீள் சுழற்சி செய்வதை இலகுவாக்கி சுற்றாடல் பாதிப்பை குறைப்பதே முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வர்த்தமானிகளில் குறிப்பிட்ட விடயங்களை மீறும் சந்தர்ப்பகளில் தேசிய சுற்றாடல் சட்டம் 31ஆவது பிரிவின்படி தண்டனை வழங்கப்படுமென மததிய சுற்றாடல் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment